பரம்பிக்குளம் வாய்க்காலில் தண்ணீர் திருட அமைக்கப்பட்ட குழாய்கள் அகற்றம்- விவசாயி கைது


திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து விவசாயத்திற்காக 2-ம் மண்டல பாசனத்திற்கு கடந்த 4ம் தேதியன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நெகமம், சுல்தான்பேட்டை வழியாக காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிக்கு செல்கிறது. இதன் மூலம் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

 

இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள மூலனூர் பகுதியில் செல்லும் பரப்பிக்குளம் பிரதான வாய்க்கால் பகுதிகளின் ஓரங்களில் பைப் அமைத்து சிலர் தண்ணீர் திருடுவதாக பிஏபி கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுசெய்த போது அங்கு வாய்க்கால் ஓரத்தில் கற்களுக்கு இடையே குழாய் அமைத்து திருட்டுத்தனமாக தண்ணீர் திருடப்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, உடனடியாக ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு குழாய்களை அகற்ற முயன்றபோது கால்வாய் அருகே முறைகேடாக குழாய் பதித்து  தண்ணீர் திருடிய விவசாயி பழனிச்சாமி அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரி சதீசை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். ஆனாலும், பொதுப்பணித் துறையினர் வாய்க்கால்  பகுதியில் முறைகேடாக பதித்த குழாய்களை முழுவதும் அகற்றினார்கள். 

இதைத்தொடர்ந்து, அதிகாரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயி பழனிச்சாமி மீது பொதுப்பணித் துறையினர் நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, விவசாயி பழனிச்சாமியை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...