நபார்டு வங்கியின் மூலம் ரூ.16892.31 கோடி மதிப்பீட்டில் கடன் திட்ட புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்களுடனான வருடாந்தர கடன் திட்ட புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், நபார்டு வங்கியின் 2017-18ம் ஆண்டிற்கான கடன்திட்ட அறிக்கையினை வெளியிட்டு தெரிவித்ததாவது:-

நபார்டு வங்கியானது விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த அதிக அளவில் பணப்பயிர்களை சாகுபடி செய்ய ஊக்கப்படுத்தி பல்வேறு கடன்திட்டங்களை வழங்கி வருகின்றது. இதன் மூலம் வேளாண் விளைச்சலை அதிகப்படுத்துதல், மற்றும் பண்ணைசாரா தொழில்களில் அதிக அளவிலான வேலைவாய்ப்பினை ஏற்படுத்துதல் ஆகிய அணுகுமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி வருகின்றது. 

இதுவரையில் கோவை மாவட்டத்தில் மட்டும் 1500 பண்ணை சார்ந்த கூட்டுப்பொறுப்புகளை உருவாக்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்ட அறிக்கை தொலைநோக்கு பார்வையுடன் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குதல் என்ற கொள்கையுடன், பல அரசுத்துறைகள், வங்கிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனைகள் மற்றும் விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

2017- 2018-ஆம் வருடத்திற்கான தீட்டப்பட்ட மொத்த கடன் திட்ட தொகையான ரூ.16892.31 கோடியில் 38 சதவிகிதம் வேளாண்மைத் துறைக்கும், 46 சதவிகிதம் சிறு குறு தொழில்களுக்கும், கல்விக்கடன், வீட்டுக்கடன், ஏற்றுமதிக்கடன் முதலியவற்றிற்கு 16 சதவிகிதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், நபார்டு வங்கியின் உதவியின் மூலம் 4 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தோற்றுவிக்கப்படவுள்ளன. இவற்றினை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கனரா வங்கி பொதுமேலாளர் எஸ்.கிருஷ்ணன், துணை மேலாளர் பரமசிவம், நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் அருள்செல்வன், ஆர்பிஐ மேலாளர் வி.சரவணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அ.கனகராஜ் உள்ளிட்ட வங்கி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...