வ.உ.சி யின் அழகிய பூங்காவும், ஆபத்தான கழிப்பறையும்..!

கோவையில் முக்கிய தளமாக வ.உ.சி. பூங்கா விளங்குகிறது. கோவையில் இருக்கும் அனைவரும் இப்பூங்காவை பற்றி தெரியாமலும்,  இங்கு வராதவர்களும் இல்லை. வ உ.சி. பூங்கா கோயம்புத்தூர் மாநகராட்சியால் நிர்வகிக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகிறது. இப்பூங்கா சிறுவர் முதல் அனைத்து வயதினருக்கும் பொழுதுபோக்கு மையமாக விளங்குகிறது. இப்பூங்காவில் வ.உ.சி. உயிரியல் பூங்கா, சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, மூத்த குடிமக்களுக்கான பூங்கா மற்றும் வ.உ.சி மைதானம் உள்ளது. கோவையில் முக்கிய மைதானமாக வ.உ.சி. மைதானம் சிறந்து விளங்குகிறது. இம்மைதானத்தில், நடைபெறாத நிகழ்ச்சிகளே இல்லை. குடியரசுத் தினவிழா, சுதந்திர தினவிழா, அரசுப் பொருட்காட்சி, அனைத்து கட்சி கூட்டம், விளையாட்டு நிகழ்வுகள் என பல்வேறு வகையான முக்கிய நிகழ்வுகளும் இங்குதான் நடைபெறுகிறது. இன்றும் நடைபெற்றும் வருகிறது.



ஆனால், கோவை வ.உ.சி. மைதானப் பூங்காவில் 10-க்கும் மேற்பட்ட கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டும், ஒன்று கூட பயன்பாட்டில் இல்லை என்பது வருத்தமளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. பூங்காவுக்கு வரும் மக்கள் அனைவரும் திறந்தவெளிக் கழிப்பிடங்களைத் தேடிச் செல்லும் நிலை நிலவுகிறது. விடுமுறை நாட்கள் மட்டுமில்லாமல் சாதாரண நாட்களிலே கூட, இங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இங்கு ஒவ்வொரு பூங்காக்களிலும் தனித்தனியே கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பொதுவாக ஒரு கட்டணக் கழிப்பிடம், நவீனக் கழிப்பிடங்கள், ‘நம்ம டாய்லெட்’ கழிப்பிடங்கள் என சுமார் 10-க்கும் அதிகமான கழிப்பிடங்கள் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இவை அனைத்துமே காட்சிக்கு வைக்கப்பட்டது போல, பூட்டிக் கிடக்கின்றன அல்லது பராமரிப்பின்றிக் கிடக்கின்றன. மூத்த குடிமக்கள் நினைவு பூங்காவில் உள்ள கழிப்பிடம் ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் மட்டும் திறக்கப்படும். அதைத்தான் பெரும்பாலானோர் காத்திருந்து பயன்படுத்துவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.



மூத்த குடிமக்கள் நினைவு பூங்காவை பற்றி கோவை மாநகர இளம் பொறியாளர் நம்மிடம் கூறுகையில்:-

கோவை, வ.உ.சி யில் உள்ள மூத்த குடிமக்கள் நினைவு பூங்கா இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. காலையில் இப்பூங்கா  4 மணி முதல் 9 மணி வரை திறக்கப்படும். மலையில் 5 மணி முதல் 8 மணி வரை திறக்கப்படும். மேலும் முதியோர்களுக்கு ஏற்றவாறு நடைபாதைகள், குடிநீர் வசதிகள், 20 இருக்கை மற்றும் ஆண், பெண்களுக்கான தனித் தனி இரண்டு கழப்பறைகள் உள்ளது. இரவு நேரங்களில் பாதுகாப்பு வசதிகாக நடைபாதைகளின் இருபுறமும் 150 எல்.இ.டி மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. போர்வெல் மூலம் புற்களுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கப்படுகிறது. பூங்காவின் பராமரிப்பு வேலைகள் செய்ய ஒப்பந்ததாரர் திருமதி.மணி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பிற்கு 10 பேர் வேலை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.



ஆனால், நாம் அங்கு சென்று காணும் போது, மூத்த குடிமக்களுக்கான போதிய வசதிகள் பூங்காவில் இல்லை. மூத்த குடிமக்கள் பூங்காவின் உள்ளே சென்றபோது, 15அடி தூரத்தில், இடது புறத்தில் ஆண், பெண்களுக்கான தனித் தனி இரண்டு கழிப்பறை உள்ளது. அதில் ஒன்று பூட்டிய நிலையில் இருந்தது, மற்றொன்று திறந்த நிலையில் இருந்தது. திறந்த நிலையில் உள்ள கழிப்பறை தண்ணீர் வசதி இல்லாமலும், இரவு நேரங்களில் செல்வதற்கு மின்விளக்கு வசதியும் இல்லை. அருகில் சென்றாலே நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இதற்கிடையே இங்கு அமைதிக்காக வரும் முதியோர்கள் திரும்பி செல்லும் பொது நோய்தொற்றும் அபாயம் அதிகம் உள்ளது. 



சென்றவாரம் நவம்பர் 19ம் தேதி அன்று உலக கழிப்பறை தினம் அனுசரிக்கப்பட்டது. அதற்கு கிராமத்தில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் நாம், நகரத்தின் மத்தியில் உள்ள பூங்காவில் கழிப்பறை பராமரிக்கப்படாமல் நோய்களின் கூடாரமாக இருக்கிறது. நம் கண்ணெதிரே தெரியும் பராமரிப்பு இல்லாத கழிப்பறைகளை கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு, இதற்கிடையே நாம் அவர்களுக்கு கழிப்பறையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது சரியா? மக்களின் கேள்விக்கு மாநகராட்சியின் பதில் என்ன?

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...