மறுபிறவி எடுத்த சாலையோர மரங்கள்..!

பொள்ளாச்சி சாலையினை விரிவுபடுத்துவதற்காக கடந்த மாதம் கோவை முதல் பொள்ளாச்சி வரை சாலை ஓரத்தில் இருந்த மரங்களை வெட்டுவதற்கு மாநகராட்சி பணியை தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மரங்களின் அழிவில் இருந்து மீட்க கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயனை சந்தித்தனர்.



அதன்பின், சாலையோர மரங்களை வேரோடு எடுத்து மாற்று இடத்தில் மரங்களை நடுவதற்கு மாநகராட்சி ஆணையர்  உத்தரவு வழங்கினார். இந்த முயற்சியில் சாலையோர மரங்களை ஈச்சனாரி சாலையில் உள்ள ரத்தினம் கல்லாரியில் நடுவதற்கு அந்நிறுவனத்தினர் அனுமதி அளித்தனர். 



அதனைத் தொடர்ந்து, சுந்தராபுரம் சாலையோர பகுதியில்   இருந்த மரங்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் வேருடன் அகற்றப்பட்டு,  ரத்தினம் கல்லூரியில் நடப்பட்டது. 

அந்த மரங்கள் ஊழியர்களின் தொடர் கணிப்பு மற்றும் பராமரிப்பால் தற்போது மறுபிறவி எடுத்ததைபோல் வளர தொடங்கியுள்ளது.



மரங்களை வெட்டி அதனை அழிக்கும் முயற்சியில் இருந்து மீட்டெடுத்து தற்போது அந்த மரங்கள் நல்ல முறையில் துளிர்விட்டு வளர்வது அதனை மீட்ட தன்னார்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...