பணமில்லா வர்த்தகம் குறித்து தியாகி குமரன் மார்கெட்டில் வானதி ஸ்ரீனிவாசன் பிரச்சாரம்.


சிறிய காய்கறி கடைகளில் பணமில்லா வர்த்தகம்  செய்வது குறித்து பா.ஜ.க மாநில பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் வங்கி அதிகாரிகளுடன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பணமில்லா வர்த்தகம் மேற்கொள்ளும் முறையை பின்பற்றும் பொருட்டு பா.ஜ.க சார்பாக கோவை தியாகி குமரன் மார்கெட்டில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு, காய்கறி வியாபாரிகளிடம் இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தி உள்ள கியூ ஆர் கோடு  பயன்படுத்தி விற்பனை செய்வது குறித்து விளக்கம் அளித்தனர். 

இதன் மூலம் வியாபாரிகளின் இந்தியன் வங்கி கணக்கில் இருந்து உருவாக்கிய கியூ. ஆர் கோட்டில், வாடிக்கையாளர்கள் தங்கள் இந்தியன் வங்கி ஆப் மூலம் ஸ்கேன் செய்து , பணமில்லா பரிவர்த்தனையில் ஈடுபடலாம் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திராத வாடிக்கையாளர்களும் இச்சேவையை பயன்படும் வகையில் ஆப் உருவாக்கும் முறையில் இந்தியன் வங்கி ஈடுபட்டு வருவதாகவும் , வங்கியில் கணக்கு இல்லா வியாபாரிகளுக்கு வங்கி கணக்கு துவங்க பா.ஜ.க நிர்வாகிகள் சார்பாக உதவிகள் மேற்கொள்ளப்படும் என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...