சூலூர், பட்டணத்தில் 600 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த தம்பதி கைது!


சூலூர், நவ. 1; சூலூர் அருகே புதன்கிழமை நள்ளிரவில் சூலூர் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் பட்டணம் மற்றும் பட்டணம் புதூரில் வாடகை வீட்டில் 600 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த தம்பதியை கைது செய்தனர். 

கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள பட்டணம் மற்றூம் பட்டணம்புதூர் கிராமங்களில் கடந்த ஏழு மாதங்களாக கஞ்சா வியாபாரம் செய்யும் தம்பதியான தேன்மொழி(33), ரவி(35) ஆகிய இருவரும் வாடகைக்கு வீடு பிடித்து அங்கே கஞ்சாவை பதுக்கி வைத்திருந்துள்ளனர். தேன்மொழியின் அக்கா பிரபல கஞ்சாவியபாரி தேனியை சேர்ந்த சொக்கனை காதல் திருமணம் முடித்துள்ளார். 

இந்நிலையில் தேன்மொழி தனது திருமணத்திற்கு முன்பு தனது அக்கா வீட்டில் கஞ்சா பொடியை பொட்டலம் கட்டி வைக்கும் வேலை செய்துவந்துள்ளார். பின்னாளில் தேன்மொழிக்கு கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரவியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் பிறகு தனது அக்காவிடம் கிடைத்த அனுபவத்தினை பயன்படுத்தி கஞ்சாவினை வாங்கி விற்கும் தொழில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிறிது காலம் கவுண்டன்பாளையத்தில் கஞ்சாவிற்கும் தொழில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் அங்கு துடியலூர் காவல் நிலையத்தில் கஞ்சா விற்பது சம்பந்தமாக வழக்குகள் இருவர் மீதும் உள்ளதால் இருப்பிடத்தை மாற்றியுள்ளனர். 

கடந்த எட்டு மாதத்திற்கு முன்பாக கோவையின் புறநகர்பகுதியான சூலூர் அருகே பட்டணம் மற்றும் பட்டணம்புதூர் கிராமத்தில் வாடகைக்கு வீடு பிடித்து அங்கே ஆந்திரவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து பதுக்கிவைத்து கோவையின் பிறபகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பிவந்ததாக தெரிகிறது. இவர்களுக்கு மாவட்டம் மட்டுமல்லாது மாநில அளவில் கஞ்சா விற்பனையாளர்களுடன் உள்ள தொடர்பால் அதிக அளவில் கஞ்சாவினை  வாங்கி பட்டணத்தில் பதுக்கியுள்ளனர். 

இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி சூலூர் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்றதாக கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த அன்வர்சாதிக் மகன் ரியாஸ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணையில் கஞ்சா கொள்முதல் பற்றிய தகவல்களைக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். பட்டணத்தில் கஞ்சா பதுக்கிவைத்திருப்பது குறித்து சூலூர் காவல்துறைக்கு தகவல் தெரியவர புதன்கிழமை நள்ளிரவு பட்டணம் மற்றும் பட்டணம்புதூரில்  உள்ள வீடுகளைச் சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டினுள் இருந்த சுமார் 600 கிலோ அளவுள்ள கஞ்சாவை கைப்பற்றினர். 

மேலும் அங்கு பதுங்கியிருந்த தம்பதிகள் தேன்மொழி மற்றும் ரவியை கைது செய்தனர்.  அப்போது தப்பிய உசிலம்பட்டியை சேர்ந்த சிவா மற்றும் கவுண்டம்பாளயத்தை சேர்ந்த ஜெயபாலன் உள்ளிடோரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.  இவர்களிடத்தில் தற்போது போலீஸர் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. வியாழக்கிழமை காலை இச்சம்பவம் பற்றி விசாரிக்க கோவை காவல் கண்காணிப்பாளர் ரம்யாபாரதி சூலூர் காவல் நிலையம் வந்தார். மேலும் துணைக்கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீஸ் படைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். விரைவில் விசாரித்து வழக்குபதிவு செய்யப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...