காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தூய்மை இந்தியா விழிப்புணர்வு சைக்கிள் பயணம் டிச. 6-யில் கோவை வருகை


தூய்மை இந்தியா திட்டத்தின் விழிப்புணர்வுக்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணத்தில் பங்கேற்றுள்ள வீரர்கள் வரும் டிசம்பர் 6ம் தேதியன்று கோவைக்கு வருகின்றனர்.

மக்களிடம் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் மிட் டவுன் சார்பில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான சைக்கிள் பயணம் நடைபெற்று வருகிறது.

இந்தப் பயணம் கடந்த நவம்பர் 7-ம் தேதியன்று காஷ்மீரில் துவங்கியது. ஒரு மாதம் வரை நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்ட இந்தப் பயணம் வரும் டிசம்பர் 9-ம் தேதியன்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது. 

ரோட்டரி அறக்கட்டளை துவங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நடைபெறும் இந்தத் தொலைதூர சைக்கிள் பயணத்தில் 22 சைக்கிள் பந்தய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் ஒரு மாதகாலப் பயணத்தில் சுமார் 4500 கிலோ மீட்டர் சைக்கிள் மூலம் கடந்து வருகின்றனர்.

இவர்கள் தற்போது தில்லி, ஜெய்பூர், காந்திநகர், மும்பை, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி மாவட்டத்தை அடைய திட்டமிட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக சைக்கிள் பயணக் குழு வரும் டிசம்பர் 6ம் தேதியன்று கரூர் வழியாக கோவையை வந்து அடைகிறது. இதைத்தொடர்ந்து, இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு கோவை அவினாசி சாலையில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் கோவை மாநகராட்சி அலுவலர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பின், இந்த சைக்கிள் பயண வீரர்கள் மீண்டும் தங்களின் பயணத்தை டிசம்பர் 7-ம் தேதியன்று காலை வஉசி பூங்கா மைதானத்தில் இருந்து துவங்குகின்றனர். சுத்தம் மற்றும் சுகாதாரத்தை வலியுறுத்தும் இந்த விழாவில் கோவை மாநகராட்சி அலுவலர்கள், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மிட்டவுன் தலைமையில் மேலும் 22 ரோட்டரி சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பாரி மற்றும் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பிரகாஷ் சந்திரன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த சைக்கிள் பயணக் குழுவுடன் கோவை மற்றும் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த 50 சைக்கிள் வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இவர்களைத் தவிர சுமார் 150 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும் இந்த சைக்கிள் பயணத்தில் பங்கேற்று 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்ய உள்ளனர்.

சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த நெடுந்தொலைவு சைக்கிள் பயணத்துக்கு மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு www.tourderotary.com அல்லது [email protected] என்ற இணையதளத்தையும், 9994402004, 9842233732 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...