தமிழக காவல்துறைக்கு குவியும் பாராட்டுகள்


ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படாமலும், இரவு பகல் பாராமலும் கடமையில் ஈடுபட்ட தமிழக காவல்துறைக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலிலதாவுக்கு நல்லடக்கம் எந்த வித சட்ட ஒழுங்கு பிரச்னையுமின்றி மிக அமைதியாக அரசு மரியாதையுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் காவல் துறையினர் சிறப்பான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விடுப்பில் சென்றிருந்த போலீஸார் அனைவரும் உடனடியாக மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டனர். மறு உத்தரவு வரும் வரையில் பணியில் இருக்க வேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக சென்னையில் 15,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் வெளிமாவட்டங்களில் உள்ள ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், இளைஞர் படையினர், அதிவிரைவு படையினர், அதிரடிப் படை உள்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த காவலர்கள் சென்னைக்கு வந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதே போன்று தமிழகத்தில் பிற மாவட்டங்களிலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரண்டு நாட்களாக சாலையில் வைத்தே உணவுகளை சாப்பிட்டும், சாலையிலேயே ஒய்வு எடுத்தும் இரவு பகலாக பணி செய்தனர்.

இந்நிலையில், காவல் துறையினரின் இந்த அர்பணிப்பு மிகுந்த பணியை பொதுமக்களும், பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். தமிழகத்தை அமைதிப் பூங்காவாகவே இருக்கச் செய்த காவல் துறைக்கு நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஏராளமான மீமஸ்கள் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

திரைப்பிரபலங்கள் பலரும் போலீஸாரின் பணியை பாராட்டி வருகின்றனர். இது குறித்து நடிகர்கள் சிலர் தங்களது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ள கருத்து:

நடிகர் விவேக்:

ஊண் உறக்கமின்றி அயராது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறைக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நடிகர் விஷால்:

ஜெயலலிதாவின் உடல் மிக அமைதியான முறையில் நல்லடக்கம் செய்வதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து ஆண், பெண் காவலர்களுக்கு எனது மரியாதை கலந்த வணக்கத்தை தெரிவிக்கிறேன்.

நடிகர் விக்ரம் பிரபு: 

போலீஸ் என்றலே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் எண்ணத்தை, மாற்றி நீங்கள் தான் சிறந்தவர்கள் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.

இயக்குநர் கவுதம் மேனன்:

தமிழ்நாடு போலீஸ் – நீங்கதான் பெஸ்ட். உங்களுக்கு மரியாதை கலந்த வணக்கத்துடன், நன்றியைத் தெரிவிக்கிறேன். சிறப்பான பாதுகாப்பை அளித்துள்ளீர்கள்.                  

Newsletter

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...