ஜெயலலிதா மரணத்தை அறிந்து அன்னூரில் தீக்குளித்த விவசாயி மரணம்!


தமிழக முதல்வர் கடந்த 5ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதை தொடர்ந்த் தமிழகதில் உள்ள அ.இ.அ.தி.மு.க.  தொண்டர்கள் கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தியும் மொட்டை அடித்தும், மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர் . 

இந்த நிலையில்,  கோவை மாவட்டம் அன்னூர் தாலுக்காவிற்குட்பட்ட ஆத்திகுட்டை பகுதியைச்சேர்ந்த அதிமுக வின் தீவிர விசுவாசியான விவசாயி ராமச்சந்திரன். ஜெயலலிதா இறந்த செய்தியை அறிந்து வீட்டின் வெளிப்புறத்தை பூட்டிவிட்டு சமையல் அறையில் இருந்த இரண்டு லிட்டர் மண்ணெண்ணெயை எடுத்துக் கொண்டு  ஊருக்குள் வந்து தனது உடலில் ஊற்றி , தீ பற்ற வைத்துக்கொண்டார். 

இதைபார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து தண்ணீரை எடுத்து  ராமச்சந்திரன் மீது ஊற்றி அவரை காப்பாற்றினர். இதை தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு தகவல் சொல்லப்பட்டது உடலில் 80 சதவீதத்திற்கு மேல் தீக்காயமடைந்த அவரை 108 அவசர ஊர்தி மூலம் அன்னூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேற்சிகிச்சைக்காக கோவை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் இன்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். 

யாருமே வரவில்லை!

ஜெயலலிதா-வின் மரணச்செய்தியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயன்ற ராமச்சந்திரனை பார்க்க அக்கட்சியை சேர்ந்த ஒருவர் கூட வரவில்லை என்பது, ராமச்சந்திரனின் குடும்பத்தாருக்கு சொல்லிலடங்கா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...