ஜெயலலிதாவின் மகள் என்ற வதந்தியால் மனவேதனையடைந்த திவ்யா குடும்பம்


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களை பெருத்த மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் மறைந்த ஜெயலலிதாவின் உண்மை மகள் இவர்தான் என திவ்யா ராமநாதன் வீரராகவன் என்ற பெண்ணின் புகைப்படம் வேகமாக பரவி வருகிறது. இதனால், அந்த பெண்ணின் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.

பார்ப்பதற்கு ஜெயலலிதாவைப் போலவே தோற்றமளிக்கும் அந்த பெண் குறித்த புகைப்படங்கள் கடந்த 2014ம் ஆண்டு முதலே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து அவரது குடும்பத்தினரும் பலமுறை மறுப்பு தெரிவித்து வெளியிட்ட தகவல்கள் மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை.

இதுகுறித்து பிரபல பின்னணி பாடகியும், திவ்யா ராமநாதன் வீரராகவன் உறவினருமான சின்மயி ஸ்ரீபதா தற்போது சமூகவலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், இப்புகைப்படத்தில் உள்ள திவ்யா ராமநாதன் வீரராகவன் என்னுடைய உறவினர். இவரை எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும். ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசித்து வரும் இவரைக் குறித்து சில காலமாக சமூக பக்கத்தில் மறைந்த ஜெயலலிதாவின் மகள் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், ஜெயலலிதாவிற்கும் இவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதை எனது உறவினர்களும், நண்பர்களும் மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.



இதைத்தொடர்ந்து இசைக் கலைஞர் வித்வான் வி.பாலாஜி வதந்திகுறித்து சமூக வளைதளத்தில் சின்மயி ஸ்ரீபதா பதிவுசெய்த கருத்தை பகிர்ந்தார். மேலும் அந்த பதிவில், இத்துடன் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும் என நம்புவதாகவும், இதனால் அந்த பெண்ணின் குடும்பம் ஊடகங்களின் பாரவையில் இருந்து தப்பும் என்றும் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...