வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னைக்கு கோவை மாநகராட்சியின் சார்பில் உணவு மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் விரைவு


சென்னை மாநகரத்தை தற்போது மையம் கொண்டு வர்தா என்னும் புயல் பலத்த காற்றுடன் வீசிவருகிறது. மணிக்கு 110 முதல் 160 கிலோ மீட்டர் வரை வர்தா புயல் காற்று வீசுவதால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மழையும் பெய்து வருவதால் வெள்ளப் பெருக்கு அபாயமும் ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் மக்கள் அரசு பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.



இதனைத்தொடர்ந்து, தற்போது வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் கோவை மாநகராட்சியின் சார்பில் 150 துப்புரவு பணியாளர்கள் அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் , உணவு, உடை, துண்டு, போர்வை, சோப்பு, பற்பசை, தண்ணீர் பாட்டில்கள், ரொட்டி- ஜாம், பிஸ்கட் மற்றும் மருந்து மாத்திரைகள், காயத்திற்கான மருந்துகள் உள்ளிட்டவை அனுப்பிவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் கோவை மாநகர மக்கள் தங்களால் இயன்றதை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு 8 மணிக்குள் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேற்குறிப்பிட்ட பொருட்களை வழங்குமாறு மாநகராட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 8056472237, 7708950011, 9791985668

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...