ஆக்கிரமிப்பில் இருந்து சுமார் 12.3 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடம் மீட்பு

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.12.3 கோடி மதிப்பிலான 1.24 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்ட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய வார்டு பகுதிகளிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் இடங்களை கண்டறிந்து, விரைவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.12.3 கோடி மதிப்பிலான 1.24 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலம், வார்டு- 56, சௌரிபாளையத்திலுள்ள பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.3.5 கோடி மதிப்பிலான 37 சென்ட் அளவிலான இடங்களும், மேற்கு மண்டலம், வார்டு- 6 கவுண்டம்பாளையம் பகுதியில் பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 25 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டுள்ளது.

மேலும, இதேப்போன்று வடக்கு மண்டலம், வார்டு-41, கணபதி மாநகர் பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான 2 சென்ட் அளவிலான இடங்களும், தெற்கு மண்டலம், வார்டு-89, முல்லை நகர் சுண்டக்கமுத்தூரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 20 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வார்டு- 90, குனியமுத்தூரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான 40 சென்ட் அளவிலான இடங்களும், மத்திய மண்டலம், வார்டு- 53  சித்தாபுதூர் பகுதியில் சாலையோர கடைகளையும் அகற்றப்பட்டு ஆகமொத்தம் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.12.3 கோடி மதிப்பிலான 1.24 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.'' இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...