ரொம்ப வித்தை காட்டுறீங்களே பாஸ்..!


நாம் ஒரு செயலை செய்ய பயப்படும் போது அதை அசால்டாக செய்யும் ஒருவரை திறமைசாலி என்று கூறுவோம். அதே நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது உபயோகிக்கும் ஒரு சாதாரண பொருளை கொண்டு நமக்கு தெரியாத பல விந்தைகள் செய்யும் ஒருவரை வித்தைக்காரன் என்போம். 

அந்த வகையில், நம் சிறுவயதில் அனுதினமும் ஓட்டி மகிழ்ந்த சைக்கிளை வைத்து பல வித்தைகள் செய்து வருகிறார் கோவை நேருநகர் பகுதியை சேர்ந்த அருண். பல நாட்களாக அவினாசி சாலையை உபயோகிக்கும் ஒவ்வொருவரும் இவரின் வித்தைகளை பார்த்திருக்க கூடும். 

மாலை நேரம் என்றால் அவினாசி சாலையின் நிலை பற்றி கூறவா வேண்டும்? போக்குவரத்து சிக்கல்களும், சிக்னல்களும் வாகன ஓட்டிகளை வாட்டி வதைக்கும் நேரம். அந்த நேரத்தில் தான் அருண் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு அவினாசி சாலையில் பயணிக்கிறார். இதிலென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? 

இரண்டு சக்கரங்கள் உள்ள சைக்கிளில் முன் சக்கரம் வானத்தை நோக்கியிருக்க பின் சக்கரத்தை மட்டும் உபயோகித்து பயணிக்கிறார் இவர். அட, எதுக்குப்பா இந்த குறும்பு தனம் என்று பலர் கேட்க, ஒற்றை சக்கரத்தை மட்டும் பயன்படுத்தி சைக்கிளில் அதிக தூரம் பயணித்து கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பது தான் தனது லட்சியம் என்று துடிப்போடு கூறுகிறார் அருண். 



அருண் தனது சைக்கிள் பயணம் குறித்து நம்மிடம் கூறியதாவது:- 

அனைவரையும் போல சிறுவயதில் சைக்கிளின் மீதான ஆர்வம் தொற்றிக்கொண்டது. ஆனால், அந்த ஆர்வம் என்னையும், நான் அந்த ஆர்வத்தையும் விட்டபாடில்லை. 

10 வருட ப்ராக்டீஸ்

நான் 5ம் வகுப்பு படிக்கும் போது நண்பர்களுடன் சேர்ந்து சைக்கிளில் சின்ன சின்ன சாகசங்கள் செய்வேன். அதை என் பக்கத்து வீட்டு நண்பர்களிடம் செய்து காட்டியபோது அனைவரும் என்னை பாராட்டினர். அன்று தொடங்கியது சைக்கிள் மீதான ஆர்வம். என் அப்பா பெயர் மணி. தனியார் கூரியர் நிறுவன ஊழியர். அம்மா கோமதி, இல்லத்தரசி. நடுத்தர குடும்பம் என்பதால் எனக்கு பிடித்த சைக்கிளை வாங்குவதில் பல இடர்பாடுகள். அடம்பிடித்து சைக்கிளை வாங்கினேன். பின்னர், தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டேன். கடந்த 10 ஆண்டுகளாக சைக்கிள் சாகசம் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் சாகசம் செய்யும்போது பலமுறை கீழே விழுந்து பலத்த காயம் பட்டேன். வீட்டிலும் நிறைய அடிவாங்கினேன். ஆனாலும், சைக்கிள் சாகச பயிற்சியை தொடர்ந்தேன். தற்போது, டிப்ளோமோ படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். 



கின்னஸ் ஆசை

வேலைக்கு சென்ற போதிலும் சைக்கிள் மீதான ஆசை குறையவில்லை. ஒற்றை சக்கரத்தில் ஒரு மணி நேரத்தில் 20 கிலோமீட்டர் ஓட்டி லண்டனை சேர்ந்த ஒருவர் கின்னஸ் சாதனை புரிந்ததை தெரிந்து கொண்டேன். அந்த சாதனையை முறியடிக்கும் நோக்கில் பயிற்சி பெற்றேன். கடந்த 2011ம் ஆண்டு அரை மணி நேரத்தில் 10 கிலோமீட்டர் தூரம் ஒற்றை சக்கரத்தில் பயணித்தேன். தற்போது, ஒரு மணி நேரத்திற்கான பயிற்சியை தொடர ஆசைப்படுகிறேன். ஆனால், குடும்பச்சூழல் காரணமாக இந்த சாகச பயிற்சியை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். சைக்கிள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் என மொத்தம் 20 ஆயிரம் ருபாய் வரை செலவாகிறது. என்னால் அந்த நிதியை திரட்ட முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக நான் பயணித்த சைக்கிள் தற்போது பழுதடைந்து போனது. 

என்ன செய்வது?

சைக்கிளை புதுப்பிக்க பணமின்றி தவித்தேன். அப்போது பலர், எனக்கு உதவி செய்வதாக கூறினர். ஒவ்வொரு அலுவலக படிக்கட்டுகளுக்கும் ஏறி இறங்கினேன். ஒருவர் கூட எனக்கு உதவ முன்வரவில்லை. இருந்த போதும் சோர்ந்து போக மனமில்லை. விரைவில் என்னுடைய வருமானத்தில் புதியதோர் சைக்கிள் வாங்கி அதில் சாகசங்கள் புரிந்து பழைய கின்னஸ் சாதனையை முறியடித்து அந்த கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவது ஒன்றே எனது லட்சியம். 

சைக்கிள் ஓட்டுங்க பாஸ்

வளர்ந்துவிட்ட இந்த சமூகத்தில் இளைஞர்கள் பலர் சைக்கிள் ஓட்டுவதற்கு வெட்கப்படுகின்றனர். சைக்கிள் என்ற ஒன்று காண்பதற்கு அறிய பொருளாக மாறிவருகிறது. தினமும் சில கிலோமீட்டர் சைக்கிள் பயணம் செய்வது நம் மனதுக்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும். உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும் ஸ்டாமினா-வை அதிகரிக்கவும் இது உதவுகிறது. 

பெட்ரோல், டீசலுக்கான தேவை அதிகரிக்க, அதிகரிக்க அவற்றின் விலையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால், குறைந்த தூரம் உள்ள இடங்களுக்கு செல்ல தயவு செய்து சைக்கிள் பயன்படுத்துங்கள் நண்பர்களே. 

இவ்வாறு அருண் கூறினார். 

அருணின் இந்த சாதனை முயற்சியை ஒவ்வொருவரும் பாராட்டியே ஆகவேண்டும். நம் ஊரில் திறமை படைத்தவர்கள் அதிகம் உள்ளனர். அதே நேரத்தில் அவர்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களும் கோவை மண்ணில் இயற்கையாகவே வளர்ந்து நிற்கின்றன. அவர்களுக்கு அருண் போன்றவர்களை அடையாளம் காட்டுவோம். முடிந்தால் இவர்களுக்கு இந்த சாதனையாளர்களுக்கு உதவுவோம்.  அருணின் கின்னஸ் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

Newsletter

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...