மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்து விற்பனை செய்யும் மருந்தகத்தின் உரிமம் ரத்து செய்யப்படுமென எச்சரிக்கை


கோவையில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்யும் மருந்துக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுமென மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் தமிழ்மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் தமிழ்மணி கூறுகையில், 

மருந்தங்கள் மற்றும் மருந்து கடைகளில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் எந்த மருந்துகளையும் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 

குறிப்பாக வலி நிவாரணி மற்றும் வலி நீக்க மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது எனவும், வலி நீக்க மருந்துகளை மருத்துவர்களின் கண்காணிப்பு இல்லாமல் உட்கொள்வதால் சிறுநீரகம் மற்றும் ஈரல் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

மேலும், இந்த விதிமுறையை கடுமையாக அமல்படுத்தும் வகையில் ஒரு உதவி இயக்குநர் மற்றும் 6 மருந்து ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

மருந்துகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் பெட்டிக்கடைகள் மீது காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாகவும், போதியளவு மருந்துகள் கையிருப்பு இருப்பதாகவும் கூறிய அவர், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...