மூடப்பட்ட தனியார் நிறுவனத்தில் மீண்டும் பணி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு மனு அளித்த பெண் தொழிலாளர்கள்

கோவையில் டி.டி.எல் என்ற தனியார் வைரம் பட்டை தீட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் வைரம் பட்டை தீட்டும் மையங்கள் நரசிம்மநாயக்கன் பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றது.



இந்நிலையில் சூலூரில் செயல்பட்டு வரும் நிறுவனத்தை கதவடைப்பு செய்த நிர்வாகத்தினர், அதில் பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட ஊழியர்களை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள நிறுவனத்திற்கு மாற்றியுள்ளனர். 

இதைத்தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த நிறுவன ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அந்நிறுவனத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

ஆட்சியர் அலுவலக வாயில் முன் அமர்ந்த பெண் ஊழியர்கள் தனியார் நிறுவனம் கதவடைப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது சூலூரில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதிக்கு செல்ல 40 கி.மீ தூரம் என்பதால் அனைத்து பெண் தொழிலாளர்களும் சென்று வர முடியாது எனவும், எனவே சூலூரில் உள்ள நிறுவனம் தொடந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுத்தினர். 

பெண்களின் போராட்டம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனை முற்றுகையிட்ட பெண் தொழிலாளர்கள், அவரிடம் தங்கள் குறைகளை எடுத்துரைத்தனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், பெண் தொழிலாளர்களுக்கு உறுதியளித்தார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...