அனைத்து ரயில்களிலும் ஆர்ஏசி இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்திய ரயில்வே முடிவு

அனைத்து ரயில்களிலும் ஆர்ஏசி இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

ரயில் பயணங்களுக்கு முன்பதிவு செய்யும் போது, ஆர்ஏசி என்று குறிப்பிட்டிருந்தால் பயணம் செய்வது உறுதியாகி விட்டது என்று அர்த்தம். ஆனால் படுக்கை வசதியில்லாமல், இருக்கையில் அமர்ந்து கொண்டே செல்ல வேண்டியிருக்கும். முன்பதிவின் போது டிக்கெட் கிடைத்தவர்கள் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்துவிட்டால், அந்த இருக்கை மற்றவருக்கு கிடைக்கும்.

தற்போது, ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிலும் ஆர்ஏசி ஒதுக்கீடு எண்ணிக்கை 5 ஆக உள்ள நிலையில் அது, 7ஆக அதிகரிக்கப்படுவதன் மூலம், 14 பேருக்கு ஆர்ஏசி ஒதுக்கீடு இருக்கைகள் கிடைக்கும். 3 அடுக்கு குளிர்சாதன பெட்டியில் 2 ஆர்ஏசி ஒதுக்கீடு உள்ள நிலையில், அது 4 ஆக அதிகரிக்கப்படுவதன் மூலம் 8 பேருக்கு ஆர்ஏசி ஒதுக்கீடு இருக்கை வசதி கிடைக்கும்.

மேலும், 2 அடுக்கு குளிர்சாதன பெட்டியில் ஆர்ஏசி ஒதுக்கீடு இருக்கை 2-ஆக உள்ள நிலையில், அது 3-ஆக அதிகரிக்கப்படுவதன் மூலம், 6 பேருக்கு இருக்கை வசதி உறுதியாகும் என்று ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். இந்த வசதி வரும் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...