பெண்களுக்கு ஏற்படும் எலும்பு, மூட்டு பிரச்சனைகளை தவிர்ப்பது எப்படி? ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் டாக்டர். R. விஜயராஜ் விளக்கம்.



ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மூட்டு, நுண்துளை அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர். R. விஜயராஜ் அவர்களின் சில ஆலோசனைகள்

மூட்டுவாதம் (ஆர்த்ரைடிஸ்) 

காண்ட்ரோமலசியா படெல்லா எனப்படும் முழங்கால் வலி முப்பது முதல் நாற்பது வயதுள்ள பெண்களுக்கு காணப்படும். முழங்கால் மூட்டு சிப்பி எழும்பின் உள்பாகத்தில் உள்ள எலும்பு ஜவ்வு மிருதுவாகி மூட்டில் அழுத்தம் அதிகமாகின்றபோது வலியை உண்டாக்கும். 



மாடிப்படி ஏறி இறங்கும்போதும், உட்கார்ந்த நிலையிலிருந்து எழும்போதும் முழங்கால் வலி அதிகரிக்கும். மூட்டு பயிற்சிகள் மற்றும் எடை குறைப்பு செய்வது உதவும். காயமில்லா நுண் துளை மூட்டு ஜவ்வு (கார்டிலேஜ்) சிகிச்சை மூலம் வலியிலிருந்து தீர்வு பெறலாம். மூட்டு வலிக்கான மாத்திரைகள் நிரந்தர தீர்வு அளிப்பதில்லை. ஆரம்பகால மூட்டுதேய்மானத்திற்கு பிசியோதெரபி, மூட்டு ஊசி மற்றும் ஆர்த்ரோஸ்கோபி எனப்படும் நுண் துளை சிகிச்சை பலனளிக்கும். வலியிலிருந்து நிரந்தர நிவாரணம் பெற மூட்டு மாற்று அறுவை சிகிச்சை உதவும்

தோள்பட்டை வலி



கையை தோள்பட்டைக்கு மேல் உயர்த்த முடியாத நிலை, தசைநார் பலவீனம் மற்றும் தூங்கும்போது தோள்பட்டையில் வலி உள்ளவர்கள் தோள்பட்டை ஊசி, சிறப்பு பயிற்சிகள்  மற்றும் காயமில்லா நுண் துளை சிகிச்சையின் மூலம் வலியிலிருந்து நிவாரணம், தோள்பட்டையின் முழு செயல்பாடு பெற முடியும்.

எலும்பு, மூட்டு தேய்மானம்

ஆண்களைவிட, பெண்களுக்கு இயல்பாகவே எலும்புகள் சிறியதாகவும், மெலிதாகவும் உள்ளதுபோல் மூட்டு ஜவ்வு (கார்டிலேஜ்) தடிமனும் குறைவாகவே இருக்கும். இதனால் பெண்களுக்கு எலும்பு, மூட்டு தேய்மானத்திற்கான வாய்ப்புகள் அதிகம். ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு புரை நோய் நாற்பது வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு காணப்படும். 



இதனால் எலும்பு பலவீனமடைந்து எலும்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வளைவு  மற்றும் எளிதில் எலும்பு முறிவு ஏற்படும். கால்சியம், வைட்டமின்-D  நிறைந்த உணவு வகைகள், தினமும் முப்பது நிமிடம் உடற்பயிற்சிகள், மருத்துவர் ஆலோசனை, மருந்துகள் மூலம் எலும்புகளை வலிமையாக்க இயலும்.

குதிகால் வலி

காலையில் உறங்கி எழுந்தவுடன் நடக்கும்போது “ப்ளாண்டர் பேச்சிடிஸ்” எனப்படும் உபாதை உள்ளவர்களுக்கு குதிகால் வலி அதிகமாக இருக்கும். குதிகால் ஊசி, சிறப்பு பயிற்சிகள் மற்றும் மென்மையான காலணிகள் அணிவதன் மூலம் வலி நிவாரணம் பெறலாம்.

இளம்பெண்கள் உயர்ந்த குதிகால் காலணிகள் அணிவது தற்போது பரவலாக உள்ளது. இதனால் மூட்டுகளில் அழுத்தம் அதிகரித்து பாதம், முழங்கால், இடுப்பு மற்றும் முதுகு மூட்டு தேய்மானம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற உயர்ந்த குதிகால் காலணிகளை தவிர்ப்பது நல்லது.

பாத வலி 

தட்டையான பாதம் உள்ளவர்களுக்கு பாத வலி, மூட்டு வலி மற்றும் மூட்டு தேய்மானம் வரக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. மருத்துவ ஆலோசனை, சிறப்பு பயிற்சிகள் மற்றும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட காலணிகள் அணிவதன் மூலம் பாதம், கணுக்கால், முழங்கால் மூட்டு வலி வராமல் தவிர்க்கலாம்.

மூட்டு தசைவலி

பெண்கள் மாதவிடாய் முடிந்த முதல் வாரத்தில் ஹார்மோன்களின் சமநிலை மாறுவதால், மூட்டு சுற்றியுள்ள தசைநார்கள் மென்மையாகவும் பலவீனமாகவும் இருக்கும். இந்த காலகட்டத்தில் தசைநார்கள் சேதமடைவதை தடுக்க விளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடுவது முக்கியம். 

மூட்டுகளுக்கு அதரவு தரும் பாண்டேஜுகள் அணிவது நல்லது. விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் மருத்துவ ஆலோசனை மூலம் சிறப்பு பயிற்சிகள் பெற்று மூட்டு சுற்றியுள்ள தசைகளை வலிமையாக்க இயலும். விளையாட்டுகளின் போது சேதமடையும் குறிப்பிட்ட தசைநார்கள் முழுவதுமாக ஆறுவதில்லை. நுண் துளை தசைநார் புணரமைப்பு சிகிச்சைக்கு பின்பு மீண்டும்  விளையாட்டுகளில் தொந்தரவின்றி கலந்துகொள்ள இயலும். 

Newsletter

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...