ஸ்வச் சர்வேக்ஷன் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஐந்து மண்டலங்களிலுள்ள 100 வார்டுகளில் ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை கொண்டு ரேஸ்கோர்ஸ் சிறுவர் பூங்கா அருகில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்களை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் வழங்கினார். 



கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளிலும் ஸ்வச் சர்வேக்ஷன் 2017 என்பது “புகைப்படம் எடுப்போம்! மாற்றத்தை உறுவாக்குவோம்!” மற்றும் ஸ்வச்சதா செயலி என்பது “நமது கையில் விலையுயர்ந்த ஆயுதம் உள்ளது, புகைப்படம் எடுங்கள், ஸ்வச்சதா செயலி பதிவிறக்கம் செய்து உங்கள் பகுதியை செலவின்றி தூய்மைப் படுத்துங்கள்” என்று வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் ஏந்திய பிரச்சார வாகனங்கள் மூலமும் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. 

மேலும், இதன் தொடாச்சியாக ரேஸ்கோர்ஸ் சிறுவர் பூங்கா அருகில் 250க்கும் மேற்பட்ட கற்பகம் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி பற்றிய துண்டு பிரசுரத்தை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளுக்கும் இம்மாணவர்கள் வீடு வீடாக சென்று, பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வு அளிப்பதற்கு பொது மக்கள் அதிக அளவில் கூடும் முக்கிய இடங்களான காந்திபுரம், ஆர்.எஸ்புரம் ஆகிய இடங்களில் ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

இதில், துணை ஆணையாளர் காந்திமதி, மத்திய மண்டல உதவி ஆணையர்(பொ)மோகனசுந்தரி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...