பாஸ்போர்ட் பெறுவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது


பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. மேலும் பாஸ்போர்ட் பெறுவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், 

1.கடந்த 26.01.1989க்கு பிறகு பிறந்தவர்கள், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, பிறப்பு சான்றிதழ் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்படுகிறது. அவர்கள், பிறந்த தேதியுடன் கூடிய கடைசியாக படித்த கல்வி நிறுவனங்கள் வழங்கும் மாற்று சான்றிதழ், பான்கார்டு எண், ஆதார் கார்டு எண், டிரைவிங் லைசென்ஸ், தேர்தல் அடையாள அட்டை, பொது காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிய காப்பீடு ஆவணம் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.

2.அரசு பணியில் உள்ளவர்கள் பணி ஆவணம், பென்சன் உத்தரவு ஆவணம் ஆகியவற்றில் ஒன்றை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.ஆன்லைனில் விண்ணப்பம் செய்பவர்கள், இனிமேல் தந்தை அல்லது தாயார் அல்லது பாதுகாவலர்கள் யாராவது ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் மட்டும் போதும்.

4.பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்பவர்கள் நோட்டரி பப்ளிக், முதல் நிலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்  போன்றவர்களிடம் அத்தாட்சி கையெழுத்து வாங்க தேவையில்லை. சுய சான்றிதழ் மட்டும் அளித்தால் போதும்.

5.திருமணமானவர்கள், திருமண சான்றிதழ் அளிக்க வேண்டிய கட்டாயமில்லை. பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது கணவன்/ மனைவி பெயர்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.

6.பிறந்த தேதி தெரியாமல் காப்பகங்களில் வளர்ந்தவர்கள், தங்களது காப்பக தலைவரிடம் சான்று வாங்கி சமர்ப்பித்தால் போதும். உள்நாட்டில் தத்தெடுத்தவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது, உறுதிமொழி அளித்து ஆவணம் வழங்கினால் போதும்.

7.உயர் அதிகாரிகளிடம் ஐடன்டி சர்டிபிகேட் வாங்க முடியாத அரசு ஊழியர்கள், அவசர தேவைக்காக உயரதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து சுய சான்றிதழ் அளித்தால் போதும்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...