தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு திருப்பிக்கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித்தலைவர் தகவல்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு திருப்பிக்கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் அதிகரித்து வரும் கவுரவ கொலைகளை தடுக்க வலியுறுத்தி நெல்லையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் மனித உரிமை பாதுகாப்பு மாநாடு ஜனவரி 7-ஆம் தேதி நடத்த இருப்பதாகவும் அதில் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார். 

தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதை வரவேற்பதாகவும், இது போன்ற சோதனைகள் தொடர வேண்டும் என வலியுறுத்திய அவர், நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான மிகப்பெரிய இயக்கமாக பிரதமர் இதை செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் 11 பேர் நீக்கப்பட்டது சரியான நடவடிக்கை எனவும், இதை போல அரசு வழகறிஞர்கள் நியமனம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் போன்ற பணி நியமனங்கள் நியமனம் செய்யும் போது  ஆளும் கட்சி உறுப்பினர்களாக இல்லாமல் தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் புதிதாக ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்ட 83 பேர் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் பல்கலைக் கழகம் அவர்களது இணைய தளத்தில் பணி நியமனம் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களை  நேரில் சென்று சந்திப்பது தவறானது எனவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகு உள்ளிட்ட உடைமைகளை திருப்பிக்கொடுக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...