நாட்டு மாடுகள் தான் நிலையானவை: காளைகளின் பாதுகாவலர் முத்து முருகன் பேட்டி


வீரம், கம்பீரம், பாலின் சுவை, பழகுவதில் மேன்மை இவை அனைத்திலும் சிறந்தவை நாட்டுமாடுகள். இந்த நாட்டு மாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு மறைந்து வருகிறது. இந்த நேரத்தில், நாட்டு மாடுகளின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும், தனது வாழ்நாள் முடிவதற்குள் அவற்றை பாதுகாத்தே தீரவேண்டும் என்று வைராக்கியத்தோடு வாழ்ந்து வருகிறார் கோவையை சேர்ந்த விவசாயி முத்துமுருகன்.



கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரை அடுத்த குளத்துப்பாளையம் தான் இவரது சொந்த ஊர். படித்து முடித்து பல வேலை பார்த்தாகிவிட்டது. இனி உலகிற்கு ஏதாவது நன்மை செய்துவிட்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவருக்கு வயது 58. 

தனது கொள்கைகள் குறித்தும், நாட்டு மாடுகளை காப்பாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் முத்து முருகன் நம்மிடம் கூறியதாவது:-

அடிப்படையில் நான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். அதனாலேயே இயற்கையின் மீதான ஆர்வம் குழந்தை பருவம் முதல் என்னில் வளர்ந்தது. அந்த காலத்தில் ஒவ்வொரு விவசாயியும் தன்னிறைவை பெற்றிருந்தான். விதை நெல்லை கொண்டு விவசாயம் செய்து, அதை விளைவித்தான். பசுக்களின் சாணத்தை விவசாயத்திற்கு உரமாக்கினான். விளைவித்த பொருட்களில் தேவை போக மீதம் உள்ளவற்றை மற்றவரிடம் கொடுத்து தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டான். 

வியாபாரம் 

இப்படி தன்னிறைவோடு வாழ்ந்த விவசாயி தற்போது மற்றவர்களை நாடி வாழ வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. அதற்கு காரணம் விவசாயம் வியாபாரம் ஆனதே ஆகும். அதிக பொருளை விளைவிக்க வேண்டும். அதில் அதிக லாபம் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க, பல கெமிக்கல் உரங்களை பயன்படுத்தி ஹைபிரீடு பயிர்களை விளைவித்தான். விளைவு தற்போது மக்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் வருகின்றன. 

டிரேக்டர் எதுக்கு ?

பத்து ஏக்கர் நிலத்தை உழவு செய்ய ஒரு காலை மாட்டை வைத்து ஒரு நாள் முழுக்க உழவு செய்ய வேண்டும். ஆனால், டிரேக்டர் அந்த வேலையை ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்கிறது. ஆனால், இதற்கான ஆற்றல் எங்கிருந்து பெறப்படுகிறது என்பதை பலரும் யோசிக்க மறந்து விடுகின்றனர். எரிபொருட்களை கொண்டு எத்தனை காலம் டிரேக்டர்களை இயக்க முடியும். எரிபொருள் தீரும் நேரத்தில் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்விக்கு மீண்டும் விலங்குகள் சக்திக்கே திரும்புவோம் என்பது தான் பதில். அதே போல, ஒரு காளைமாட்டை கொண்டு நிலத்தை உழவு செய்யும் போது, மண்ணில் அழுத்தம் உண்டாகாது. டிரேக்டர்களை கொண்டு நிலத்தை உழவு செய்தால் அதன் பாரம் தாங்காமல் மண் இறுகிவிடும். மண்ணையும் கெடுத்து, எரிபொருளை உபயோகித்து கார்பன்டை ஆக்சிஜனை உருவாக்கி காற்றையும் மாசுபடுத்தி வருகிறோம். 



விவசாயிகள் மட்டுமல்ல, இன்று பொதுமக்கள் அனைவரும் காற்றை மாசுபடுத்தித்தான் வருகின்றனர். எரிபொருட்களை உபயோக்கிக்க வேண்டாம் என்று கூறவில்லை. தீரப்போகும் நிலையில் இருப்பதை சிக்கனமாக உபயோகிங்கள் என்று தான் கூறுகிறேன். 

காங்கேயம் காளை 

நம் நாட்டில் தற்போது ஹைபிரீடு மாடுகள் அதிக அளவில் வந்துவிட்டன. நாட்டுமாடுகளை யாரும் வளர்ப்பதே இல்லை. காரணம், அவை குறைந்த அளவில் தான் பால் கறக்கும். சிறந்தது எப்போதும் குறைந்த அளவில் தான் கிடைக்கும். இது அனைவருக்கும் தெரியும். எனது வாழ்வு முடிவதற்குள் அனைத்து விவசாயிகளும் நாட்டு மாடுகளை வளர்க்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். பால் உற்பத்திக்கு மட்டுமல்லாமல், நாட்டு மாடுகள் உழவு வேலைக்கும், அதன் உரத்திற்கும் பெருமளவில் பயன் தருகிறது. 



கடந்த 2011-ம் ஆண்டு காங்கேயம் காளை மற்றும் பசுவை வாங்கி வந்தேன். அதற்காக எனது விவசாய நிலமான 2.5 ஏக்கர் நிலத்தை முழுமையாக ஒதுக்கிவிட்டேன். தற்போது என்னிடம் 7 மாடுகள் உள்ளன. இவையனைத்துமே கலப்படம் இல்லாதவை. நிலத்தில் உள்ள செடிகள், மற்றும் நான் கொடுக்கும் இயற்கை உணவுகளை உண்டு வாழும் இந்த மாடுகளின் சாணம் விவசாயத்திற்கு சத்தான உரமாக இருக்கிறது. 

நிலையானவை 

தயவு செய்து விவசாயிகள் நாட்டு மாடுகளை உபயோகியுங்கள். அவையே நிலையானவை. நாம் இன்று உபயோகிக்கும் ஹைபிரீடு மாடுகள், டிரேக்டர்கள் மற்றும் ஏனைய பன்னாட்டு பொருட்கள் நிலையற்றவை. ஒருநாள் அவை முற்றிலுமாக இல்லாமல் போகும். அந்த நேரத்தில் நாம் திரும்ப நாட்டு மாடுகளிடம் தான் வந்தாக வேண்டும். நாம் வளர்க்கத்தவறிய மாடுகள் அந்த காலகட்டத்தில் எப்படி இருக்கும்? சிந்தித்து செயல்படுவோம்." இவ்வாறு அவர் கூறினார். 



நாட்டு மாடுகளின் அவசியத்தை பலரும் உணராத நேரத்தில் அவற்றை பாதுகாக்கவும், பராமரிக்கவும் தனது விவசாய நிலத்தை ஒதுக்கிவிட்டார் ஒரு விவசாயி. இதை அனைத்து விவசாயிகளும் பின்பற்றவும், மற்றவர்கள் ஒத்துழைக்கவும் செய்தால் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் சென்ற வரங்களாக அவை நிச்சயம் அமையும்.

Newsletter

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...