தென்னை கருகியதால் மனமுடைந்த விவசாயி மாரடைப்பால் மரணம்

திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சின்னப்பன் (72). இவருக்கு அப்பகுதியில் 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 4 ஏக்கர் பரப்பளவில் சுமார் 350-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பருவ மழை பொய்த்துப்போனதை தொடர்ந்து 8 ஆழ் குழாய் கிணறுகள் தோண்டி விவசாயத்திற்கு தண்ணீர் பெற முயற்சித்துள்ளார். ஆனால் 80 அடிக்கு மேல் தோண்டியும் தண்ணீர் வராததால் அதிர்ச்சி அடைந்த சின்னபனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைக்காக அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதித்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வறட்சியின் காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் தொடர்ந்து விவசாயிகள் பலியாகிவருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...