ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத் துவக்க விழா


ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் இராதிகா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதன்மைச் செயல் அதிகாரி சுந்தரராமன் நாட்டு நலப்பணித் திட்டத்தின் நோக்கம், மாணவர்கள் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்தும்;  மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தலைமை உரையாற்றினார்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் ஆளுமைப்பண்பு மற்றும் மத்திய அரசின்  சுகாதாரத் திட்டமான “சுவச் பாரத் அபியான்” என்பதன் கீழ் சுகாதார மேலாண்மை குறித்தும், நகரத்தை எவ்வாறு சுகாதாரமாக வைத்துக் கொள்வது? மக்கும் குப்பை, மக்காத குப்பையை எவ்வாறு தரம் பிரிப்பது? என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார்.

கோவை மாவட்ட இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி  பேரிடர் மேலாண்மை, இரத்த தான முகாம் குறித்துச் சிறப்புரை ஆற்றினார். நடப்பாண்டு நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கச் செயல்பாடுகள் குறித்து கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் பாலாஜி உரையாற்றினார். இளைஞர் செஞ்சிலுவைச் சங்கக் திட்ட அலுவலர் குமரேசன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...