ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் 13 வயது சிறுமிக்கு இருதய ஈரிதழ் வால்வு மாற்று சிகிச்சை


திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்ட சிறுமிக்கு கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதய நிபுணர் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டது. சிறுமிக்கு ஈ சி ஜி எடுத்து பரிசோதனை செய்துபோது அவரது இடதுபுறத்தில் உள்ள ஈரிதழ் தடுப்பு வால்வில் (மிட்ரல் வால்வு)  கசிவு இருந்தது. அதோடு இருதயமும் பெரியதாகியிருந்தது. ஈரிதழ் வால்வு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தியாகராஜமூர்த்தியின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முதலமைச்சரின் காப்பீட்டின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.



டாக்டர் தியாகராஜமூர்த்தி தலைமையிலான டாக்டர்கள், விஜய் சதாசிவம் அசோக் ஹரிஹரன், மேனன், அருண்குமார், கிருஷ்ணன், சுஜித் ஆகியோர் அடங்கி குழுவினர் மிட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். மார்பின் வலது பகுதியிலிருந்து 3 இன்ச் அளவிற்கு துளையிட்டு, இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று தொழில்நுட்ப சிகிச்சைப்படி வெற்றிகரமாக மேற்கொண்டனர். அவரது வால்வு, சரி செய்ய இயலாத அளவுக்கு மோசமடைந்திருந்தது. அறுவை சிகிச்சையில் மாற்றி அமைத்த பின், இரண்டு மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பினார். தொடர்ந்து ஓரிரு நாளில் அவர் இயல்பாக நடக்கவும் செய்தார். தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக இத்தகைய வால்வு மாற்று அறுவை சிகிச்சையை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்திலேயே இலவசமாக இந்த சிறுமிக்கு சர்வதேச தரத்தில் செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...