Education
கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 44-வது ஆண்டு விழா
SimpliCity News Team · 16 hours ago

Coimbatore: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 44-வது ஆண்டு விழா ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை அரங்கில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் டயானா அனைவரையும் வரவேற்று பள்ளியின் ஓராண்டு சாதனையை வாசித்தார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக விஜய் டிவி “தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு” நிகழ்வின் டைட்டில் வெற்றியாளர் சொல்லின் செல்வர் மு.ராகவேந்திரன் ME., அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் தனது உரையில் மாணவர்கள் கல்வியோடு மட்டுமல்லாமல், ஒழுக்கத்தையும் தனித்திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த கல்வியாண்டில் படிப்பிலும், விளையாட்டு மற்றும் பிற போட்டிகளிலும் முதலிடம் பிடித்த மாணவ - மாணவிகளுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.
விழாவின் முக்கிய அங்கமாக மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். இறுதியாக, பள்ளியின் மாணவர் தலைவன் நன்றியுரை கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
