Coimbatore: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் தூர்வாரப்பட்ட சங்கனூர் கால்வாயினை இன்று (06.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.86க்கு உட்பட்ட உக்கடம் புல்லுக்காடு பகுதியில் குடியிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் அடிப்படை வசதிகள் தொடர்பாக, ஆணையாளர் நேரில் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஆணையாளர் கட்டா ரவி தேஜா, கிழக்கு மண்டலம் வார்டு எண்.52க்கு உட்பட்ட ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் தூர்வாரப்பட்ட சங்கனூர் கால்வாயினை நேரில் பார்வையிட்டு, தூர்வாரும்போது கால்வாயிலிருந்து எடுக்கப்பட்ட குப்பைகள், மண் மற்றும் இதர கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், ஆணையாளர், மத்திய மண்டலம் வார்டு எண்.83க்குட்பட்ட வ.உ.சி. பூங்கா பகுதியில் உள்ள குடிநீர் ஏடிஎம்-ஐ நேரில் பார்வையிட்டு, அங்கு ஏற்பட்டுள்ள பழுதுகளை விரைவாக சரிசெய்து, உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, செயற்பொறியாளர்கள் ஜாக்குலின் ஜாய் லதா, தேவதாஸ், உதவி செயற்பொறியாளர்கள் கனகராஜ், இளங்கோவன், சரவணக்குமார், உதவி நகர திட்டமிடுநர் அருள்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் அகமது கபீர், மோகன், மண்டல சுகாதார அலுவலர்கள் சந்திரன், தனபாலன், உதவி பொறியாளர்கள் சதீஷ், பர்மான் அலி, சுந்தர்ராஜன், முரளிதரன், சுகாதார ஆய்வாளர்கள் சலைத், ஜெரால்டு சத்யபுனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

