Govt Notification
கோவை சங்கனூர் சாலையில் கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்
SimpliCity News Team · 16 days ago

Coimbatore: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.33க்குட்பட்ட கவுண்டம்பாளையம், சங்கனூர் பிரதான சாலையில் உள்ள கால்வாய் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழைக்காலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், வெள்ள அபாயத்தைத் தவிர்க்கவும் இந்த பணிகள் கோவை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கவுண்டம்பாளையம், சங்கனூர் பிரதான சாலையில் உள்ள கால்வாய்களில் தேங்கியுள்ள மண், குப்பைகள் அகற்றப்பட்டு, நீர் சீராக ஓடும் வகையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.