Govt Notification
கோவை தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் (14.10.2026) மின்தடை
SimpliCity News Team · 4 days ago

Coimbatore: கோவை தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.10.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை நடைபெற உள்ளது.
தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த மின்தடை விதிக்கப்படுகிறது என மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வகுத்தம்பாளையம், தேவனாம்பாளையம், செட்டிப்புதூர் ஒரு பகுதி, கப்பளாங்கரை ஒரு பகுதி, எம்மேகவுண்டன்பாளையம், சேரிப்பாளையம், ஆண்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.