Govt Notification
கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் விழுந்த மரம் அகற்றும் பணியை பார்வையிட்ட அமைச்சர் சம்பத்குமார்
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.71-க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம், டி.பி.சாலை பகுதியில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தினை அப்புறப்படுத்தும் பணியினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் நேரில் பார்வையிட்டார்.
அக்டோபர் 19, 2026 அன்று இந்த பணியை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் வே.சம்பத்குமார், பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்தில் இடையூறு ஏற்படாமல் இருக்க, மரத்தினை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
