Govt Notification
கோவை மத்திய மண்டலத்தில் மழைநீர் தேங்குகிறதா என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
SimpliCity News Team · 8 hours ago

Coimbatore: கோவை நகரில் பல்வேறு இடங்களில் லேசாக மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், மாநகராட்சி அலுவலர்கள் மழைநீர் தேக்கத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய மண்டலத்துக்குட்பட்ட அவினாசி மேம்பாலத்தில் மழைநீர் தேங்கியுள்ளதா என்பதனை மாநகராட்சி அலுவலர்கள் கள ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேபோல், மத்திய மண்டலத்துக்குட்பட்ட காளீஸ்வரா மில் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதா என்பதனை மாநகராட்சி அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

