Govt Notification
அகில இந்திய காவல்துறை விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற கோவை பெண் காவலருக்கு பாராட்டு
SimpliCity News Team · 5 days ago

Coimbatore: கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் இரண்டாம் நிலைக் பெண் காவலர் செல்வி.ஸ்ரீநிதி WPC(455), அகில இந்திய காவல்துறை விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
ஹைதராபாத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) சார்பில் 23.07.2026 முதல் 30.07.2026 வரை நடைபெற்ற 11-வது அகில இந்திய காவல்துறை ஜூடோ கிளஸ்டர் விளையாட்டுப் போட்டிகள் – 2026-இல், டேக்வாண்டோ (Taekwondo) பிரிவில் பங்கேற்ற ஸ்ரீநிதி, வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இவரது சாதனையைப் பாராட்டும் வகையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K. ரெட்டி, இ.கா.ப., அவர்கள், இன்று (22.10.2026) செல்வி.ஸ்ரீநிதியை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்துப் பாராட்டி, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
காவல்துறையில் பணியாற்றிக்கொண்டே விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கி, மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ள காவலர் ஸ்ரீநிதியின் சாதனை மற்ற காவலர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கோவை மாவட்ட காவல்துறை – மக்கள் சேவையில், சாதனைகளிலும் முன்னோடி!