Govt Notification
கோவை செம்மொழி பூங்காவில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கோலம், ஆரோக்கிய உணவு நிகழ்ச்சி
SimpliCity News Team · 8 days ago

Coimbatore: கோவை மாநகராட்சி, காந்திபுரம், செம்மொழி பூங்கா வளாகத்தில், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பின் மாதிரி கோலத்தை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டார்.
அதே வளாகத்தில், இன்று (14.11.2026) உலக நீரிழிவு தினத்தை (World Diabetes Day) முன்னிட்டு, மாநகராட்சி சார்பில் அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் பங்கேற்ற ஆரோக்கியமான உணவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஆணையாளர் கட்டா ரவி தேஜா தொடங்கி வைத்து, உணவினை சுவைத்து பார்த்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர் நல அலுவலர் மரு.சுபாஷ்காந்தி, உதவி ஆணையர் கணேசன், மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன் (பொ), முருகன், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் மாநகராட்சி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

