Govt Notification
கோவை எம்.ஜி.சி. பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (20.11.2026) மின்தடை
SimpliCity News Team · 3 days ago

Coimbatore: கோவை எம்.ஜி.சி. பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (20.11.2026) ஐந்து மணி நேரம் மின்தடை ஏற்படவுள்ளது.
கோவை மாவட்டம், எம்.ஜி.சி. பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.
இதனால், எம்.ஜி.சி. பாளையம், பொன்னேகவுண்டன்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்பசெட்டிபுதூர், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனூர் சில பகுதிகள் மற்றும் ஊரைக்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.