Govt Notification
கோவை செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (20.11.2026) மின்தடை
SimpliCity News Team · 3 days ago

Coimbatore: கோவை மாவட்டம், செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (20.11.2026) மின்தடை ஏற்படவுள்ளதாக மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.
இதனால், மூப்பேரிபாளையம், தட்டாம்புதூர் மற்றும் நாரணாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.