Govt Notification
கோவை அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (21.11.2026) மின்தடை
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (21.11.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை நடைபெற உள்ளது.
இந்த மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடாக இந்த மின்தடை விதிக்கப்பட உள்ளதாக மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்கப்பாளையம் மற்றும் சொக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.