Govt Notification
கோவையில் ரூ.17.25 கோடியில் 34 பணிகளுக்கு அமைச்சர் சம்பத்குமார் அடிக்கல் நாட்டினார்
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.17.25 கோடி மதிப்பீட்டில் 34 பணிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
மேற்கு மண்டலத்தில் ரூ.3.89 கோடி மதிப்பீட்டில் 8 பணிகளும், கிழக்கு மண்டலத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் 12 பணிகளும், மத்திய மண்டலத்தில் ரூ.9.02 கோடி மதிப்பீட்டில் 14 பணிகளும் என மொத்தம் 34 பணிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீகிரிபிரசாத் ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
மேற்கு மண்டலம், வார்டு எண்.42-க்குட்பட்ட கோவில்மேடு மாநகராட்சி உயர் நிலைப்பள்ளி மற்றும் வார்டு எண்.45-க்குட்பட்ட கே.கே.புதூர் மாநகராட்சி உயர் நிலைப்பள்ளி ஆகியவற்றில் தலா ரூ.85.00 இலட்சம் மதிப்பீட்டில் மெய்நிகர் ஆய்வகம் (ARVR Lab) அமைக்கப்படும். வார்டு எண்.36-க்குட்பட்ட VNR நகர் மயானத்திற்கு ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளும், அதே வார்டு 36-க்குட்பட்ட தில்லை நகர் 10-வது குறுக்குத் தெருவில் ரூ.38.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைப்பதற்கும் பணி தொடங்கப்பட்டது. வடவள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி (வடக்கு) வளாகத்திற்கு ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணியும், லாலி சாலை சந்திப்பு முதல் வடவள்ளி வரை ரூ.51.00 இலட்சம் மதிப்பீட்டில் 120 வாட் எல்.இடி தெருவிளக்குகள் அமைக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது.
வார்டு எண்.41-க்குட்பட்ட மருதமலை பிரதான சாலையில் புது கிணறு முதல் மாரியம்மன் கோவில் தெரு வரை ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் மூடு பலகை திரும்ப கட்டும் பணியும், வார்டு எண்.44-க்குட்பட்ட NRG வீதி மற்றும் அதன் குறுக்குப் பகுதியில் ரூ.55.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டும் பணியும் மேற்கொள்ளப்படும்.
கிழக்கு மண்டலத்தில், வார்டு எண்.9-க்குட்பட்ட ஸ்ரீநகர் பகுதியில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் மறுதார் தளம் அமைக்கப்படும். வார்டு எண்.22-க்குட்பட்ட ஸ்ரீ வினேஷ் நகர் பகுதியில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டும் பணியும், வார்டு எண்.24-க்குட்பட்ட டெலிகாம் நகர், தண்ணீர் பந்தல் 7-வது வீதியில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டும் பணியும் தொடங்கப்பட்டது. வார்டு எண்.51-க்குட்பட்ட சுப்பகோனார் வீதியில் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் கட்டும் பணி, வார்டு எண்.52-க்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் ஸ்ரீதனலட்சுமி நகர் பகுதியில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் அதே பணி, வார்டு எண்.53-க்குட்பட்ட காந்திநகர் மேற்கு வீதி, வரதராஜபுரம் மேற்கு வீதி மற்றும் பழனிசாமிகவுண்டர் வீதி பகுதியில் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் கட்டும் பணி, வார்டு எண்.55-க்குட்பட்ட திருவிக நகர் வீதி 1,2,3,4,5 மற்றும் SIHS நகரில் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் கட்டும் பணி ஆகியவை தொடங்கப்பட்டன.
வார்டு எண்.57-க்குட்பட்ட மங்கலப்புரம் பகுதியில் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் கட்டும் பணியும், அதே வார்டுக்குட்பட்ட SMS Layout பகுதியில் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் இதே பணியும், வார்டு எண்.58-க்குட்பட்ட சேரன் நகர் பகுதியில் ரூ.35.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் கட்டும் பணியும், வார்டு எண்.60-க்குட்பட்ட சி.எம்.சி காலனி பகுதியில் ரூ.49.00 இலட்சம் மதிப்பீட்டில் கால்வாய் தடுப்புசுவர் கட்டும் பணியும், வார்டு எண்.61-க்குட்பட்ட போயர் மார்கெட் வீதி, செல்லாண்டியம்மன் கோவில் வீதி மற்றும் நடு வீதி பகுதிகளில் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் கட்டும் பணியும் துவக்கி வைக்கப்பட்டன.
மத்திய மண்டலத்தில், வார்டு எண்.63-க்குட்பட்ட சூரியன் தெரு சமுதாயக் கூடத்திற்கு ரூ.33.00 இலட்சம் மதிப்பீட்டில் எம்.எஸ். டிரஸ், பஃப் ஷீட் கூ கொட்டகை மற்றும் பராமரிப்பு பணியும், வார்டு எண்.84-க்குட்பட்ட காந்தி நகரில் ரூ.37.00 இலட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மையம் (ICDS) கட்டும் பணியும் தொடங்கப்பட்டது. ஜி.பி.எம். நகர், லட்சுமிபுரம், நடேசா கவுண்டர் லே-அவுட், முத்துகுமார் நகர், கணேசன் தெரு, ஜி.வி.ராமசாமி தெரு, வி.ராமசாமி தெரு மற்றும் வார்டு எண்.47-க்குட்பட்ட பகுதிகளில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் ஆர்.சி.சி. மூடுதளம் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
வார்டு எண்.48-க்குட்பட்ட காந்திபுரம் தெரு விரிவாக்கம் 3 மற்றும் 4-இல் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் புனரமைப்பு மற்றும் ஆர்.சி.சி. மூடுதளம் அமைக்கும் பணி, வார்டு எண்.62-க்குட்பட்ட இந்திரா நகர் 1, 2, 3 மற்றும் 4-வது குறுக்குச் சாலைகளில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வார்டு எண்.64-க்குட்பட்ட ஆசிரியர் குடியிருப்பு மற்றும் ஆசிரியர் குடியிருப்பு சாலையில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் புனரமைப்பு பணி, வார்டு எண்.66-க்குட்பட்ட காவல் நிலையம் அருகே புளியகுளம் சாலையில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் புனரமைப்புப் பணி, வார்டு எண்.83-க்குட்பட்ட அவிநாசி சாலையிலிருந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) வரை உள்ள பாலசுந்தரம் பிரதான சாலையில் ரூ.69.00 இலட்சம் மதிப்பீட்டில் மையத்தடுப்புச் சுவர் புனரமைப்பு மற்றும் அழகுபடுத்தும் பணி, அனுப்பார்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தற்போதுள்ள வகுப்பறையில் ஸ்மார்ட் வகுப்பறை (ஏஆர்/விஆர் ஆய்வகம்) அமைக்கும் பணி ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டன.
மேலும், வார்டு எண்.80-க்குட்பட்ட ஒக்கிலியார் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் வார்டு எண்.49-க்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் தலா ரூ.8.55 இலட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் (ஏஆர்/விஆர் ஆய்வகம்) அமைக்கும் பணிகள், வார்டு எண்.66-க்குட்பட்ட புளியகுளம் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் வார்டு எண்.82-க்குட்பட்ட வி.எச்.சாலை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தலா ரூ.8.55 இலட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணி, வார்டு எண்.69-க்குட்பட்ட இராமலிங்கம் காலனி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ரூ.8.55 இலட்சம் மதிப்பீட்டில் மெய்நிகர் ஆய்வகம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.17.25 கோடி மதிப்பீட்டில் 34 பணிகளுக்கு அமைச்சர் வே.சம்பத்குமார் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளின்போது, துணை ஆணையாளர் த.குமரேசன், மண்டல உதவி ஆணையர்கள் தட்சிணாமூர்த்தி (கிழக்கு), கணேசன் (மத்தியம்), நர்மதா (மேற்கு), மாமன்ற உறுப்பினர் சாந்தி, செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவிப் பொறியாளர் விமலா, மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

