News
கோவையில் காரில் தொங்கியபடி கடத்தல்காரர்களை பிடித்த தலைமைக் காவலருக்கு ரோட்டரி சங்கம் பாராட்டு
SimpliCity News Team · 19 days ago
Coimbatore: கோவையில் காரின் மேற்கூரையில் தொங்கியபடி 40 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கடத்தல்காரர்களை மடக்கிப் பிடித்த கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகனுக்கு கோயம்புத்தூர் ரோட்டரி சங்கம் வடக்கு ரோட்டரி மாவட்டம் 3206 சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.
கோவை, கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ் ஆகியோர் கடந்த வாரம் வழக்கம் போலப் பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்ய முயன்ற போது, கடத்தல் காரர்கள் காருடன் தப்பியோட முயன்றனர்.
அப்போது காரின் மேற்கூரையில் பாய்ந்து பிடித்துத் தொங்கியபடி 40 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, கடத்தல்காரர்களைச் சாதுரியமாக மடக்கிப் பிடித்த வேல்முருகனின் த்ரில்லிங் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து வேல்முருகனின் வீர தீர செயலை கேள்விப் பட்டு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவரை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் பல்வேறு அமைப்பினர் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கோயம்புத்தூர் ரோட்டரி சங்கம் வடக்கு ரோட்டரி மாவட்டம் 3206 சார்பாக வேல்முருகனுக்கு பாராட்டு தெரிவிக்க முடிவு செய்து அவரை நேரில் சந்தித்த ரோட்டரி சங்கத்தினர் அவரின் அனுபவங்களை ஆர்வமுடன் கேட்டறிந்து, அவருக்கு தலைப்பாகை, சால்வை மற்றும் சந்தன மாலை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் ரோட்டரி சங்கம் வடக்கு ரோட்டரி 3206 தலைவர் ஆர் திவாகர், துணை ஆளுநர் எஸ் பிரபு, ஏ ஜே ஜோய், பப்ளிக் இமேஜ் சேர் ஜவகர், சரவண விக்னேஷ், மகேஷ்வரன், விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
Coimbatore PoliceVelmuruganRotary ClubKovilpalayam Police StationGutka SmugglingTamil Nadu Chief MinisterJoseph VijayPolice Felicitation
Related stories
News
Coimbatore Police Introduce Family Liaison Officers to Assist Crime Victims
12 Sept 2026
News
Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition
11 Sept 2026
News
Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition
10 Sept 2026
News
Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi
09 Sept 2026
News
Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting
08 Sept 2026
News
Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day
02 Sept 2026