News
கோவை 1-வது வார்டு தென்றல் நகரில் குடும்பங்களுக்கு 4 வகை குப்பைத் தொட்டிகள் வழங்கல்
SimpliCity News Team · 16 days ago

Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.1க்குட்பட்ட தென்றல் நகர் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நான்கு நிறங்களில் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டன. குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் சிறப்பு கழிவுகள் என பிரித்து தருவதற்காக இந்த நான்கு வண்ண தொட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 06.10.2026 அன்று மாமன்ற உறுப்பினர் கற்பகம் மற்றும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜீவமுருகராஜ் ஆகியோர் முன்னிலையில் இந்த தொட்டிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வின்போது, குப்பைகளை முறையாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.