News
கோவை மாவட்டம்: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்ட நிலவரம்
SimpliCity News Team · 14 hours ago

Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று அணைகளிலும் டிசம்பர் 4ஆம் தேதி நிலவரப்படியான நீர்மட்ட விவரங்களை நீர்வளத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் டிசம்பர் 4ஆம் தேதி நிலவரப்படி நீர்மட்டம் 55.1 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 90 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 50 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், தொடர்ந்து நீர் வரத்து ஏற்பட்டு டிசம்பர் 4ஆம் தேதி நிலவரப்படி நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 97 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 37 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
வால்பாறையை அடுத்த சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் டிசம்பர் 4ஆம் தேதி நிலவரப்படி நீர்மட்டம் 55.35 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 280 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 85 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.