News
கோவை EASA பொறியியல் கல்லூரி - Darthwares நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
SimpliCity News Team · 4 days ago

Coimbatore: கோவை, நவக்கரையில் அமைந்துள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, Darthwares நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்ச்சி 05.11.2026 அன்று கல்லூரி மாநாட்டு அரங்கில் நடைபெற்றது. EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் Z. ராபர்ட் கென்னடி மற்றும் Darthwares நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சாம் டேனியல் ஆகியோர் தங்களது நிறுவனங்களின் சார்பில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்தக் கூட்டாண்மையின் மூலம், மாணவர்களின் தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்தும் வகையில் 'Leet Campus' மென்பொருள் கல்லூரி முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. Darthwares நிறுவனத்தால் கல்வி நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள இம்மென்பொருள், அந்நிறுவனத்தின் சர்வரில் நிறுவப்பட்டு பராமரிக்கப்படும்.
இந்த மென்பொருள் மூலம் நுண்ணறிவு சார்ந்த பகுப்பாய்வு, உடனுக்குடன் கருத்துப் பின்னூட்டம் மற்றும் தொடர்ச்சியான மேம்பாடு ஆகியவற்றின் வாயிலாக மாணவர்களின் பேச்சு மற்றும் எழுத்துத் தொடர்புத் திறன்கள் மேம்படுத்தப்படும். மேலும், கல்லூரியின் தேவைகளுக்கு ஏற்ப மென்பொருளில் சிறிய அளவிலான மாற்றங்களையும் Darthwares நிறுவனம் மேற்கொள்ளும்.
இம்மென்பொருளைச் சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில் கல்லூரிப் பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் T.E. சுஜாதா, செயலாளர் T.E. அஜித் மற்றும் தாளாளர் T.E. ஆதர்ஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவர் டாக்டர் R. ரத்தினம், கல்லூரிப் பேராசிரியர்களுடன் இணைந்து ஒருங்கிணைத்தார். கல்லூரியின் புல முதன்மையர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.