News
கோவை மண்டலத்தில் தீபாவளி இரு நாட்களில் ரூ.78 கோடிக்கும் மேல் டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை
SimpliCity News Team · 9 hours ago

Coimbatore: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ரூ.441.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) தெரிவித்துள்ளது.
இதில், தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 7ஆம் தேதி ரூ.234.75 கோடிக்கும், தீபாவளி நாளான நவம்பர் 8ஆம் தேதி ரூ.206.63 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில், 666 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் இரண்டு நாட்களில் ரூ.78 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, நவம்பர் 7ஆம் தேதி ரூ.42 கோடிக்கும், நவம்பர் 8ஆம் தேதி ரூ.36 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட வாரியாகப் பார்க்கும்போது, கோவை மாவட்டத்தில் இரண்டு நாட்களில் ரூ.28.18 கோடிக்கும், திருப்பூர் மாவட்டத்தில் ரூ.19.98 கோடிக்கும், ஈரோடு மாவட்டத்தில் ரூ.15.80 கோடிக்கும், கரூர் மாவட்டத்தில் ரூ.8.12 கோடிக்கும், நீலகிரி மாவட்டத்தில் ரூ.6.02 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு கோவை மண்டலத்தில் 766 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது கடைகளின் எண்ணிக்கை 100 குறைந்து 666 ஆக உள்ளது.
மேலும், இந்த விற்பனை விவரங்களில் எஃப்.எல்.2 (FL2) மதுபானக் கூடங்களில் நடைபெற்ற விற்பனை சேர்க்கப்படவில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.