News
மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (11.11.2026) மின்தடை
SimpliCity News Team · 9 hours ago

Coimbatore: கோவை மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (11.11.2026) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அந்த நேரத்தில் பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு, கண்ணார்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மின் தடை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு தங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.