News
கோவை பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (21.11.2026) மின்தடை
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: கோவை மாவட்டம், பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (21.11.2026) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசூர் துணை மின் நிலையத்தில் இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில், பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், ஆயிமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடு புதூர், அம்மாசெட்டிபுதூர், புதுப்பாளையம் மற்றும் பூலுவபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் இன்று தெரிவித்துள்ளது.
இப்பகுதிகளில் வசிப்பவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மின்தடை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, தேவையான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு மின்வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.