News
கோவை சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (21.11.2026) மின்தடை
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (21.11.2026) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதால் இந்த மின் தடை ஏற்படுகிறது.
இதன் காரணமாக சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.