சூலூரில் அரசு பேருந்தை சிறை பிடித்து மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல்..!

குறித்த நேரத்துக்கு அரசு பேருந்துகள் வருவதில்லை என குற்றம்சாட்டி நல்லூர்பாளையம் பகுதியில் பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை: கோவை சூலூரை அடுத்த நல்லூர்பாளையம் கிராமத்தில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் வேலைக்கு செல்வோர் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு வழித்தடம் எண் 6 மற்றும் வழித்தடம் எண் 105 ஆகிய இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு பேருந்துகளும் குறித்த நேரத்துக்கு இயக்கப்படாததால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் குற்றம்சாட்டி வந்தனர்.



தொடர்ந்து இதே நிலை நீடித்து வருவதால், இன்று காலை திடீரென நல்லூர்பாளையம் பகுதியில் பேருந்துகளை சிறை பிடித்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிக்கு செல்வதற்கு எட்டு மணிக்கு வரவேண்டிய பேருந்து ஒரு மணி நேரம் தாமதமாகவும், மாலையில் 4:00 மணிக்கு வரவேண்டிய பேருந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக தாமதமாக வருவதும் சில சமயங்களில் பேருந்துகள் வருவதில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடிய இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு எட்டும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என பொதுமக்கள் அறிவித்துள்ள நிலையில், சூலூர் கோட்ட அதிகாரிகள் மற்றும் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...