மெட்ராஸ் ஐ பாதிப்பு சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பதிவாகி வந்த நிலையில் தற்போது, கோவையில் பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்.
கோவை: மெட்ராஸ் ஐ எனப்படும் 'கான்ஜுன்க்டிவிடிஸ்' நோய் பாதிப்பு கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில்கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது, கோவையில் மெட்ராஸ் ஐ நோய் பாதிப்பு அதிகளவில் பதிவாகி வருகிறது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குஇந்த நோய் எளிதில் பரவுகிறது.
குறிப்பாக கோவை அரசு மருத்துவமனையில் சுமார் 20 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, காய்ச்சல் அறிகுறியுடன் சென்ற நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
இதனால் பொதுமக்கள் விழிப்புடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனமருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது, மெட்ராஸ் ஐ பொதுவாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு, வேகமாக பரவும். மேலும் மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் கண்களில் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் சிவத்தல், அழுக்குகள் வெளியேற்றம் மற்றும் அதிக உறுத்தல் ஆகியவை ஏற்படும்.
இது ஒரு சிறிய கண் தொற்று என்றாலும், சரியான முறையில் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். மாறாக மஞ்சள், சொட்டு மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கண் நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், கண் சொட்டு மருந்துகளைமட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவரின் உடைமைகளை பயன்படுத்துவதால், இந்நோய் மற்றொருவருக்கு எளிதில் பரவும்.
எனவே, நோயாளிகளை தனிமைப்படுத்துவது முக்கியம். நோயாளிகள் தங்கள் கண்களை அடிக்கடி கழுவினால் போதும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
நோய் பாதித்தவர்கள் சரியாகும் வரை, பொது இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதோடு, கண் கண்ணாடியை பயன்படுத்தலாம்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.