நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்: கோவையில் ரசிகர் மன்றம் சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி கோவையில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தியும், பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள் செய்து ரசிகர் மன்றத்தினர் உற்சாகம்.


கோவை: தமிழகத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா அவரது ரசிகர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் அதன் நிர்வாகிகள் கடந்த 3 நாட்களாக ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கோவையில் பாபா படம் வெளியான தியேட்டர்கள் முன்பு மாவட்ட நிர்வாகி சத்தியமூர்த்தி தலைமையிலான ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (நேற்று) 200 ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் 200 ரசிகர்களை ரஜினியின் பாபா படத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.



ரஜினி பிறந்த நாளான இன்று சலீவன் வீதியில் உள்ள ஆஞ்சநேயர் சாமி ராகவேந்திரா கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்களும் நடைபெற்றது.



இதனைத் தொடர்ந்து கோவில் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து மாலையில் ஆர்.எஸ்.புரம் ரத்தின விநாயகர் கோவிலில் 108 தேங்காய்களை உடைத்து வழிபட்டனர். பின்னர் கோட்டை ஈஸ்வரன் சங்கமேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம் நடத்தினர்.

கோவையில் உள்ள அனைத்து கோவில்களிலும் 73 கிலோ இனிப்புகளை வாங்கி பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினர்.



ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி ரஜினி ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட நிர்வாகி சத்தியமூர்த்தி தலைமையில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், நிர்வாகிகள் பாபு, பட்டணம் ரவி, பிரேம்நாத், மணிவண்ணன், வடிவேல், வெள்ளியங்கிரி, செந்தில்குமார், ராஜேஷ்குமார், ஆனந்த கிருஷ்ணசாமி, செல்லதுரை, ரஜினி கண்ணன், சிவகுமார், பிரபு, பாலாஜி, ஆறுச்சாமி, சாணவாஸ், சுதாகர், ஷான் பாஷா, ஆட்டோ பாபு, ஆட்டோ மனோகர், முருகேசன், முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...