ஆன்லைன் ரம்மி விவகாரம்: ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி கோவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பிரதமருக்கு கடிதம்..!

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் தராத தமிழக ஆளுநரை திரும்ப பெறக்கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்ப வந்த கோவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தபால் நிலையம் முன்பு கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் தற்பொழுது தொடர் தற்கொலைகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்திலும் கடந்த வாரம் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

எனவே இந்த விளையாட்டை தடை செய்ய கோரி பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கு தடை விதிக்க ஆளுநர் கையெழுத்திடவில்லை என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பு எனக் கூறி, அவரை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (DYFI) பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.



மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையத்தில் கடிதம் அனுப்ப வந்த DYFI அமைப்பினர் மாவட்ட செயலாளர் அர்ஜுன் தலைமையில் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பியவாறு வந்தடைந்தனர்.



மேலும் தபால் நிலையம் முன்பும் கண்டன முழக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதில் SFI அமைப்பினர் சிலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...