திருப்பூர் பல்லடத்தில் ரூ.2 லட்சம் கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய முயன்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் - பரபரப்பு..!

பல்லடம் அடுத்த மங்கலம் ரோடு பகுதியில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், வாங்கிய ரூ.2 லட்சம் கடனுக்காக வீட்டை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மங்கலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (52). ஆட்டோ ஓட்டுனரான இவர், பல்லடத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.2 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

அதற்கான தவணையை ஆறு மாதங்கள் மட்டும் செலுத்திய நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக, தவணை செலுத்த இயலவில்லை என்று கூறப்படுகிறது.



இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்வதற்காக ரகுமானின் வீட்டுக்கு வந்துள்ளார்.



அப்போது, ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜப்தி நடவடிக்கை வேண்டாம் என்றும், கால அவகாசம் வழங்குமாறு நிதி நிறுவன ஊழியர்களிடம் வலியுறுத்தினர். அதை பொருட்படுத்தாமல், ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை தொடர்ந்த நிலையில், கால அவகாசம் வழங்குமாறு அக்கம்பக்கத்தினர் ரகுமான் குடும்பத்தினருக்கு ஆதரவாக பேசியதை அடுத்து ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...