கோவை குறைதீர்ப்புக் கூட்டத்தில் பொதுமக்களை தாக்கிய திமுக கவுன்சிலர் - வைரல் வீடியோ

கோவை அன்னூர் அருகே தரமற்ற சாலைகள் போடப்பட்டதாக குறைதீர்ப்புக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பொதுமக்கள் மீது திமுக கவுன்சிலர் மற்றும் அவரது ஆட்கள் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே கோவில்பாளையத்தை அடுத்துள்ள கொண்டையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9வது வார்டு லட்சுமி கார்டன் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சில நாட்களுக்கு முன் 6 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகள் தரமற்ற முறையில் இருப்பதாக புகார் எழுந்தது.



இந்த நிலையில் நேற்றிரவு லட்சுமி கார்டன் பகுதியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் 9 வது வார்டு திமுக கவுன்சிலர் மோகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் தரமற்றமுறையில் சாலைஅமைக்கப்பட்டுள்ளதாக கூறி, அது குறித்து கேள்வி எழுப்பினர்.இதனால் கவுன்சிலர் மோகன் மற்றும் கேள்வியெழுப்பிய இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



வாக்குவாதம் முற்றிய நிலையில், திமுக கவுன்சிலர் மோகன் உட்பட அவரது தரப்பினர்கள் கேள்வி கேட்டவர்களை தாக்கியுள்ளனர். மேலும், திமுகவை சேர்ந்த பெண் ஒருவர் பொதுமக்களில் ஒருவரை செருப்பால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மூவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவம் தொடர்பாகபோலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினர் மருத்துவமனையில் அனுமதியாகிக்கொண்டு, பொதுமக்கள் மீது பொய் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறைதீர்ப்புக் கூட்டத்தில், திமுக கவுன்சிலர் பொதுமக்களை தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...